Ire vs sa 1st t20i
IRE vs SA, 1st T20I: ரிக்கெல்டன், ஹென்றிக்ஸ் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ரோஸ் அதிர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ரோஸ் அதிர் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங்கும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
Related Cricket News on Ire vs sa 1st t20i
-
IRE vs SA, 1st T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அயலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது. ...
-
தனி ஒருவனாய் அயர்லாந்தை துவம்சன் செய்த ஷம்ஸி; தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் தப்ரைஸ் ஷம்ஸியின் அபார பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
IRE vs SA : மார்க் அதிர் பந்துவீச்சில் 165 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24