IRE vs ZIM: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி!

Updated: Fri, Aug 27 2021 19:44 IST
IRE vs ZIM: Zimbabwe beat Ireland by 3 runs (Image Source: Google)

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. ‘

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சகப்வாவைத் தவிற மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதில் அதிகபட்சமாக சகப்வா 47 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் கிரேக் யங், செமி சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - கெவின் ஓ பிரையன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

பின் 24 ரன்களில் ஸ்டிர்லிங் ஆட்டமிழக்க, ஆவரைத் தொடர்ந்து 25 ரன்களில் கெவின் ஓ பிரையனும் நடையைக் கட்டினார். இறுதியில் அயர்லாந்து அணி வீரர்கள் ரன் சேர்க்க தவறியதால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி முன்னிலைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை