தென் ஆப்பிரிக்க தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க அணியானது அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்க - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் டி20 தொடரானது செப் 27ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது அக்டோபர் 2ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. மேலும் அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. அந்தவகையில் ஒருநாள் அணியின் கேப்டனாக டெம்பா பவுமாவும், டி20 அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரமும் தொடர்கின்றனர். மேலும் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக ஆல் ரவுண்டர் ஆண்டிலே சிமெலேனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆல்ரவுண்டர் ஜேசன் ஸ்மித் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நகாபா பீட்டர் ஆகியோருக்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள நிலையில், தென் ஆபிரிக்காவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடருக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பால் ஸ்டிர்லிங் தொடர்கிறார். அதேசமயம் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஆண்ட்ரூ பால்பிர்னி டி20 தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டாலும், ஒருநாள் தொடருக்கான அணியில் தொடக்க வீரராக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு நட்சத்திர வீரர்களான மார்க் அதிர், கர்டிஸ் காம்பேர், ஆண்டி மெக்பிரைன், ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேய்க் யங், கர்டிஸ் காம்பேர், ஜார்ஜ் டெக்ரேல் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தொடருக்கான அயர்லாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷுவா லிட்டில் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து ஒருநாள் அணி: பால் ஸ்டிர்லிங் (கே), மார்க் அதிர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டக்ரெல், ஸ்டீபன் டோஹனி, கவின் ஹோய், ஃபியோன் ஹேண்ட், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரீஸ், ஆண்டி மெக்பிரைன், நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங்
Also Read: Funding To Save Test Cricket
அயர்லாந்து டி20 அணி: பால் ஸ்டிர்லிங் (கே), மார்க் அதிர், ராஸ் அதிர், கர்டிஸ் காம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், பியோன் ஹேண்ட், மேத்யூ ஹம்ப்ரீஸ், கிரஹாம் ஹியூம், நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.