சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் பால் ஸ்டிர்லிங்!
வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரி;ல் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அதன்படி அயர்லாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் போட்டியின் மூலம், அயர்லாந்து அணியின் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான பால் ஸ்டிர்லிங் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள்
இப்போட்டியில் பால் ஸ்டிர்லிங் 75 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களை பூர்த்தி செய்வார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து அணிக்காக 6ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை பால் ஸ்டிர்லிங் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். பால் ஸ்டிர்லிக் இதுவரை 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவுள்ள அவர் 5925 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 14 சதம் மற்றும் 31 அரைசதங்களை அடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 150 சிக்ஸர்கள்
இப்போட்டியில் பால் ஸ்டிர்லிங் 5 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 150 சிக்ஸர்களை பூர்த்தி செய்வார். இதனை அவர் எட்டும் பட்சத்தில் அயர்லாந்து அணிக்காக இந்த சாதனையை படைக்கும் முதல் வீரர் எனும் பெருமையையும் பால் ஸ்டிர்லிங் பெறுவார். அதேசமயம் இந்த பட்டியலில் முன்னாள் வீரர் கெவின் ஓ பிரையன் 84 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் 10000 ரன்கள்
Also Read: LIVE Cricket Score
இதுதவிர்த்து இப்போட்டியில் பால் ஸ்டிர்லிங் 37 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 10ஆயிரம் ரன்களையும் பூர்த்தி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை பால் ஸ்டிர்லிங் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 325 போட்டிகளில் 323 இன்னிங்ஸ்களில் விளையாடி 9963 ரன்களை எடுத்துள்ளார். இந்த மைல்கல்லை அவர் எட்டும் பட்சத்தில் அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.