அயர்லாந்து vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Jun 28 2022 10:38 IST
Ireland vs India, 2nd T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டப்லினில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது..

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை வெல்லும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs இந்தியா
  • இடம் - கேஷல் அவென்யூ, டப்ளின்
  • நேரம் - இரவு 9 மணி

போட்டி முன்னோட்டம்

இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயின் லெவனில் சேர்க்கப்பட்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் களமிறக்கப்படவில்லை. இதுகுறித்து பின்னர் விளக்கம் அளித்த ஹார்திக் பாண்டியா, ருதுராஜிற்கு பின்னங்கால் சதைப் பகுதியில் சிறிய பிரச்சினை இருந்தது. அதனால்தான் களமிறக்கப்படவில்லை எனக் கூறினார். 

இதனால், இரண்டாவது போட்டியில் அவர் களமிறக்கப்படுவது சந்தேகம்தான். ஒருவேளை ருதுராஜ் சேர்க்கப்படவில்லை என்றால் ராகுல் திரிபாதி அறிமுக போட்டியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

அதேபோல் அயர்லாந்து அணியில் ஹேரி டெக்டர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவருடன் பால் ஸ்டிர்லிங், ஆண்டி பால்பிர்னி ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பினால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 4
  • இந்தியா வெற்றி - 4
  • அயர்லாந்து வெற்றி - 0

உத்தேச அணி

அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), கரேத் டெலானி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், ஆண்டி மெக்பிரைன், கிரேக் யங், ஜோசுவா லிட்டில், கோனார் ஓல்பர்ட்

இந்தியா - ருதுராஜ் கெய்க்வாட்/வெங்கடேஷ் ஐயர்/ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கே), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், உம்ரான் மாலிக்

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், லோர்கன் டக்கர்
  •      பேட்டர்ஸ் - இஷான் கிஷன், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், தீபக் ஹூடா
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, கரேத் டெலானி
  •      பந்துவீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், கிரேக் யங்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை