ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
England Women vs New Zealand Women Match Prediction, ICC Women's World Cup 2025: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது
இந்நிலையில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்த்து, நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் காலை 11மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
EN-W vs NZ-W ICC Women's World Cup 2025: போட்டி தகவல்கள்
மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
இடம் - ஏசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம்
நேரம்- அக்டோபர் 26, காலை 11 மணி (இந்திய நேரப்படி)
Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium, Visakhapatnam Pitch Report
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 19 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 233 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 387 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
EN-W vs NZ-W ODI Head To Head Record
மோதிய போட்டிகள்- 85
இங்கிலாந்து - 46
நியூசிலாந்து - 37
முடிவு இல்லை - 02
EN-W vs NZ-W ICC Women's World Cup 2025: Where to Watch?
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.
England Women vs New Zealand Women Probable Playing XI
England Women Probable Playing XI: டாமி பியூமண்ட், ஏமி ஜோன்ஸ், ஹீதர் நைட், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், லாரன் பெல்.
New Zealand Women Probable Playing XI: சூசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன்.
England Women vs New Zealand Women Today's Match Prediction
2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் 27வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.
Also Read: LIVE Cricket Score
EN-W vs NZ-W Match Prediction, EN-W vs NZ-W Pitch Report, EN-W vs NZ-W Predicted XIs, ICC Women's World Cup 2025, Today's Match EN-W vs NZ-W Prediction, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, England Women vs New Zealand Women