டி20 உலகக்கோப்பை: தனது பிளேயிங் லெவனை அறிவித்த இர்ஃபான் பதான்!

Updated: Mon, Jun 20 2022 22:28 IST
Irfan Pathan Names India's Ideal Playing XI For T20 World Cup, Leaves Out Pant & Ashwin (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில்  நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருவதைப் போலவே, இந்திய அணியும் தீவிரமாக தயாராகிவருகிறது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. டி20 உலக கோப்பை நெருங்கும் வேளையில், சீனியர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் அபாரமாக பேட்டிங் செய்து தன்னை சிறந்த ஃபினிஷராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார். ஆனால் அதேவேளையில் இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார்.

எனவே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்தை விட தினேஷ் கார்த்திக்கே முன்னுரிமை பெறுவார் என தெரிகிறது. அதைத்தான் இர்ஃபான் பதானும் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் எதுவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தனது ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் இர்ஃபான் பதான்.

அதன்படி, கேப்டன் ரோஹித் - ராகுல் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ள இர்ஃபான் பதான், 3ஆம் வரிசையில் கோலி, 4ஆம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ஆம் வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆகியோரையும், விக்கெட் கீப்பர் மற்றும் ஃபினிஷராக தினேஷ்கார்த்திக்கையும் தேர்வு செய்துள்ளார்.

ஸ்பின்னர்களாக ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரையும், வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார் இர்ஃபான் பதான்.

இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும்லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை