ஐபிஎல் 2025: சிஎஸ்கேவின் லெவனை தேர்வு செய்த இர்ஃபான் பதான்!

Updated: Fri, Apr 11 2025 14:27 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரது இடத்தை எந்த வீரர் நிரப்புவார் என்ற சந்தேகங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லெவனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக டெவான் கான்வேவுடன் ராகுல் திரிபாதியை தேர்வுசெய்துள்ளார். இதனால் ரச்சின் ரவீந்திராவை மூன்றாம் வரிசையில் களமிறக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதுதவிர்த்து விஜய் சங்கரை காட்டிலும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படுவதன் காரணமாக, இப்போட்டியில் அவர் நான்காம் வரிசையில் களமிறங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

அவர்களைத்தொடர்ந்து ஷிவம் தூபே, மகேந்திர சிங் தோனி ஆகியோரையும், பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், நுர் அஹ்மத், கலீல் அஹ்மத், மதீஷா பதிரானா ஆகியோருடன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள அன்ஷூல் கம்போஜிற்கு இந்த லெவனில் இடமளித்துள்ளார். அதன்படி கடந்த சில போட்டிகளாக லெவனில் இடம்பிடித்திருத முகேஷ் சௌத்ரிக்கு பதிலாக அன்ஷுல் காம்போஜை அவர் தேர்வு செய்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இர்பான் பதான் தேர்வு செய்த சிஎஸ்கே லெவன்: டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, மத்திஷா பத்திரனா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை