சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய இஷ் சோதி!

Updated: Fri, Jul 25 2025 11:58 IST
Image Source: Google

Ish Sodhi Record: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது நியூசிலாந்து வீரர் மற்றும் உலகின் மூன்றா வீரர் எனும் பெருமையை இஷ் சோதி பெற்றுள்ளார்.

முத்தரப்பு டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டிம் செஃபெர்ட் 75 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 63 ரன்களையும் சேர்த்தனர். ஜிப்பாப்வே தரப்பில் ரிச்சர்ட் ந்ங்கரவா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் டோனி முன்யோங்கா 40 ரன்களையும், தியான் மேயர்ஸ் 20 ரன்களையும், முசேகிவா 21 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இஷ் சோதி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இஷ் சோதி ஆட்டநாயகன் விருதை வென்றதுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 150 விக்கெட்டுகளைப் பூர்த்திசெய்தார். 

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது நியூசிலாந்து பந்து வீச்சாளர் மற்றும் உலகின் மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டிம் சௌதீ 126 போட்டிகளில் 164 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் இஷ் சோதி இதுவரை 126 போட்டிகளில் விளையடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Also Read: LIVE Cricket Score

மேற்கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை நியூசிலாந்தின் முன்னாள் பந்து வீச்சாளர் டிம் சௌதீ படைத்துள்ளார். 164 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் 161 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில் தற்சமயம் இஷ் சோதி 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை