ஃபீல்டிங்கின் போது காயமடைந்த இஷான் கிஷன்- வைரலாகும் காணொளி!

Updated: Sun, Mar 23 2025 22:33 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

அந்தவகையில், முதல் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இஷான் கிஷனின் அபாரமான சதத்தின் மூலமாகவும், டிராவிஸ் ஹெட்டின் அரைசதத்தின் காரணமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் 106 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 67 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நிதீஷ் ரானா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் - துருவ் ஜூரெல் இணை அதிரடியாக விளையாடி தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 4ஆவது விக்கெட்டிற்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். 

அதன்பின் 66 ரன்களில் சஞ்சு சாம்சனும், துருவ் ஜூரெல் 70 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் 42 ரன்களையும், ஷுபம் தூபே 34 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்திய இஷான் கிஷான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் போத் இஷான் கிஷன் மோசமான காயத்தை சந்தித்தார். அதன்படி இப்போட்டியின் 18ஆவது ஓவரின் போது ஷுபம் தூபே அடித்த ஒரு பவுண்டரியை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட இஷான் கிஷான் காயமடைந்தார். மேற்கொண்டு அவர் வழியால் துடிக்கவும் செய்தார். 

Also Read: Funding To Save Test Cricket

இதனையடுத்து அணி மருத்துவர்கள் இஷான் கிஷனுக்கு முதலுதவி அளித்தனர். மேற்கொண்டு அவரின் காயம் தீவிரமாக இருப்பது போல் தெரிந்த காரணத்தால், மேற்கொண்டு ஃபீல்டிங் செய்ய அவர் களத்திற்கு வரவில்லை. இந்நிலையில் இஷான் கிஷன் காயமடைந்த காணொளி வைரலாகி வருகிறது. அதேசமயம் இஷான் கிஷானின் காயம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை