பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

Updated: Wed, Mar 06 2024 13:29 IST
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs லாகூர் கலந்தர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் ஷதாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து, ஷாஹீன் அஃப்ரிடி தலைமையிலான லாகூர் கலந்தர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இத்தொடரில் லாகூர் கலந்தர்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் குவாலிஃபையர் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது. இதனால் இந்த சீசனில் முதலில் வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்புடன் அந்த அணி விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -  இஸ்லாமாபாத் யுனைடெட் vs லாகூர் கலந்தர்ஸ்
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானமானது பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்கும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு அதிகளவு பவுன்ஸ் இருப்பதால் பேட்டர்களால் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் பந்தை ஸ்விங் செய்யும் பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக செயல்பட உதவும். இதனால் இங்கு பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • இஸ்லாமாபாத் யுனைடெட் - 10
  • லாகூர் கலந்தர்ஸ் - 08

உத்தேச லெவன்

இஸ்லாமாபாத் யுனைடெட்: காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஷதாப் கான் (கே), ஆகா சல்மான், ஆசாம் கான், ஜோர்டான் காக்ஸ், இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரப், ஹுனைன் ஷா, ரம்மான் ரயீஸ், நசீம் ஷா.

லாகூர் கலந்தர்ஸ்: சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபகர் ஸமான், ரஸ்ஸி வான்டெர் டுசென், சிக்கந்தர் ரஸா, கம்ரன் குலாம், ஜார்ஜ் லிண்டே, கார்லோஸ் பிராத்வைட், ஷஹீன் அஃப்ரிடி (கே), ஜஹந்தத் கான், சல்மான் ஃபயாஸ், ஸமான் கான்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ஆசாம் கான், சாஹிப்சாதா ஃபர்ஹான்
  • பேட்டர்ஸ்: அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ, ரஸ்ஸி வான்டெர் டுசென், ஃபகர் ஸமான்
  • ஆல்-ரவுண்டர்கள்: சிக்கந்தர் ரஸா (துணை கேப்டன்), ஆகா சல்மான், ஷதாப் கான் (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை