பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் யுனைடெட் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் பெஷாவர் ஸால்மி, முல்தான் சுல்தன்ஸ், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி நேற்று நடைபெற்ற குவாலிஃபையர்ர் சுற்று ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இஸ்லாமாபாத் யுனைடெ vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ்
- இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
- நேரம் - இரவு 9.30 மணி
பிட்ச் ரிப்போர்ட்
இப்போட்டி நடைபெறும் கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. அதிலும் இந்த அமைதானத்தின் பேட்டங் சராசரியானது 180 ரன்களை தாண்டுவதால் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. அதேசயம் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் இமாலய இலக்குகளையும் அணிகள் எளிதாக கடந்து வெற்றிபெற்றிருந்தன. இதனால் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை குவிக்கலாம்.
நேரலை
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 18
- இஸ்லாமாபாத் யுனைடெட் - 09
- குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - 09
உத்தேச லெவன்
குவெட்டா கிளாடியேட்டர்ஸ்: ஜேசன் ராய், சௌத் ஷகீல், கவாஜா நஃபே, ரைலீ ரூஸோவ் (கே), லௌரி எவன்ஸ், அகீல் ஹொசைன், முகமது வாசிம் ஜூனியர், ஒமைர் யூசுப், முகமது அமீர், அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக்.
இஸ்லாமாபாத் யுனைடெட்: காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஷதாப் கான் (கே), ஆசாம் கான், ஆகா சல்மான், ஹைதர் அலி, இமாத் வாசிம், ஃபஹீம் அஷ்ரப், நசீம் ஷா, ஹுனைன் ஷா, தைமல் மில்ஸ்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள்: ஜோர்டான் காக்ஸ், ஆசாம் கான்
- பேட்டர்ஸ்: ஜேசன் ராய், காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ்
- ஆல்-ரவுண்டர்கள்: சவுத் ஷகீல் (துணை கேப்டன்), ஆகா சல்மான், ஷதாப் கான் (கேப்டன்), அகீல் ஹொசைன், ஃபஹீம் அஷ்ரஃப்
- பந்து வீச்சாளர்: நசீம் ஷா, அப்ரார் அகமது
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.