மான்கட்டிற்கு அனுமதி வழங்கிய எம்சிசி; எதிர்ப்பு தெரிவித்த பிராட்!

Updated: Thu, Mar 10 2022 11:30 IST
Image Source: Google

‘மன்கட்டிங்’ என்பது, ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச வரும்போதே ‘நான்-ஸ்டிரைக்கா்’ பகுதியில் இருக்கும் பேட்டா் கிரீஸ் கோட்டைத் தாண்டினால், பௌலா் பந்துவீசாமல் அவரை அப்படியே ரன்-அவுட் செய்யும் முறையை குறிப்பதாகும்.

கிரிக்கெட் உலகில் இந்த முறைக்கு ஆதரவும், எதிா்ப்பும் இருந்தே வருகிறது. இந்நிலையில், மன்கட்டிங் முறையானது விதிகளுக்கு புறம்பானது அல்ல என்று விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது எம்சிசி. இந்த முறையை முதன் முதலில் கையாண்டவா் இந்திய வீரா் வினூ மன்கட் தான்.

1948-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது அந்நாட்டு வீரா் பில் பிரவுன், மன்கட்டின் எச்சரிக்கையையும் மீறி மீண்டும் அவ்வாறு கிரீஸ் கோட்டை தாண்ட, பிரவுனை இவ்வாறு ஆட்டமிழக்கச் செய்தாா் மன்கட். அதன் பிறகு இது ‘மன்கட்டிங் முறை’ என அவரது பெயராலேயே அழைக்கப்பட ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

எம்சிசியின் இந்த அனுமதிக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க்கத்தில், மான்கட் ஒரு நியாயமற்றது. ஆனால் அது தற்போது விதிமுறைகளில் கொண்டுவரப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை