ஷிவம் துபே வுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா விளையாடியது எப்படி? - அலெய்ஸ்டர் குக் காட்டம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி எடுத்த முடிவு ஒன்று பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களை விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். அதன்பின் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் போது அவருக்கு தலையில் பந்து தாக்கிய நிலையிலும், அடுத்த பந்தை எதிர்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின் இங்கிலாந்து அணி இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் ஷிவம் தூபேவுக்கு பதிலாக சப்ஸ்டிடியூட் வீரராக ரமந்தீப் சிங் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 10 ஓவர்கள் முடிவின் போது ஷிவம் தூபே ஃபீல்டிங் செய்ய வராததன் காரணமாக அவருக்கான கன்கஷன் சப்ஸ்டிடியூட் வீரராக ஹர்ஷித் ரானா விளையாடியதுடன் 4 ஓவர்கள் பந்துவீசி அதில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
ஆனால் ஐசிசி விதிகளின் படி கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக தேர்வு செய்யப்படும் வீரர் அவருக்கு சரியான மாற்று வீரராக இருக்க வேண்டும் என்பதே விதி. எடுத்துக்காட்டா பேட்டர் அல்லது பவுலருக்கு கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக மற்றொரு பேட்டரோ அல்லது பவுலரோ தான் களமிறங்க வேண்டும். அதேபோல் தான் ஆல் ரவுண்டருக்கு மாற்றாக மற்றொரு ஆல் ரவுண்டரை தான் சப்ஸ்டிடியுட்டாக விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது விதி.
அப்படி பார்த்தில் ஷிவம் தூபே பேட்டிங் ஆல் ரவுண்டராக அறியப்படுகிறார். மேலும் அவர் பந்துவீச்சில் ஒருசில ஓவர்களை மட்டுமே வீசியும் உள்ளார். இந்நிலையில் ஷிவம் தூபேவுக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா சப்ஸ்டிடியூட் வீரராக களமிறக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. மேற்கொண்டு ரமந்தீப் சிங் ஏற்கெனவே அவருக்கு பதிலாக ஃபீல்டிங் செய்திருந்த நிலையில் திடிரென ஹர்ஷித் ரானா சப்ஸ்டிடியூட் வீரராக விளையாடியது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அந்த தருணத்தில் இந்திய அணிபந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில், மாற்று வேகப்பந்து வீச்சாளர் இல்லாம் தடுமாறியது போட்டியை பார்த்த அனைவரும் அறிந்ததே. மேலும் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மட்டுமே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த நிலையில், ஹர்ஷித் ரானா கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கியதுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது இங்கிலாந்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலெய்ஸ்டர் குக், “இந்த கன்கஷன் சப்ஸ்டிடியூட் முடிவு ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. [2024] ஐபிஎல்லில் ஒரு ஓவர் கூட வீசாத ஒரு பெரிய பேட்டிங் ஆல்ரவுண்டரை, பேட்டிங் செய்யத் தெரியாத அதிக வேகத்தில் வீசும் ஒரு பந்து வீச்சாளரைக் கொண்டு மாற்றுவது எப்படி சரியான முடிவாக இருக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.
Also Read: Funding To Save Test Cricket
உண்மையில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. உண்மையைச் சொன்னால், ஒரு சுழற்பந்து வீச்சாளரை எதிர்கொள்வதை விட, ஒரு வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்வதே அவர்களுக்குப் பிடிக்கும், ஆனால் எனக்கு இன்னும் அது புரியவில்லை. ஏனில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ரமந்தீப் சிங் ஆகியோர் உள்ள நிலையில், துபேவுக்கு பதிவில் நீங்கள் 140 கிமீ வேகத்தில் வீசும் பந்துவீச்சாளரை எப்படி தேர்வு செய்தீர்கள்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.