இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளாவில் நந்து முடிந்தது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 54 ரன்களைச் சேர்த்து ஆச்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ரோவ்மன் பாவெல், அல்ஸாரி ஜோசப் மற்றும் ரூதர்ஃபோர்ட் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவரில் 89 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அரைசதம் கடந்த் பதும் நிஷங்கா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல், “இப்போட்டியின் முதல் இன்னிங்ஸிற்கு பிறகு எங்களால் 160 ரன்களை எடுக்க முடியும் என்று நம்பினோம். ஆனால் இது டி20 கிரிக்கெட்டிற்கு ஏற்ற ஆடுகளமாக இல்லை. மேலும் இலங்கை அணி வீரர்கள் ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தியதுடன, எங்களையும் தொடர்ந்து அழுத்தத்தில் தள்ளினர்.  நாங்கள் செய்தது போல் அவரும் எங்களது ஷாட்களை விளையாடமுடியாத படி பந்துவீசினர்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

எங்களால் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க 24 மணிநேரம் உள்ளது. டி20 கிரிக்கெட் என்பது மேட்ச்-அப்களைப் பற்றியது, அதனால்தான் எனது இடது கை ஸ்பின்னரை அவர்களின் வலது கை பேட்டர்களுக்கு எதிராக நான் பயன்படுத்தினே. அதே போல் அவர்களும் எங்களுடைய யுக்தியை எங்களுக்கு எதிராக பயன்படுத்தினர். அதனால் கடைசி போட்டிக்கு முன்னர் நாங்கள் எங்கள் தவறுகளை திருத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News