ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகினார் கிறிஸ் வோக்ஸ்- காரணம் இதுதான்!

Updated: Mon, Dec 19 2022 16:53 IST
It Wasn't An Easy Decision, By Any Means: Chris Woakes On Skipping IPL 2023 Auction (Image Source: Google)

உலகெங்கிலும் பல்வேறு வகையான டி20 லீக் தொடர் போட்டிகள் நடத்தப்படுகின்றன . இவற்றில் முக்கியமானதாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருப்பது இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடராகும் . இந்த ஐபிஎல் தொடரான கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வார்கள் .

இந்த ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் . 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளுக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் வருகின்ற 23ஆம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது . இந்த ஏலத்தில் 405 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள எல்லா வீரர்களின் கனவாக இருப்பது ஒரு முறையேனும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி விட வேண்டும் என்பதுதான். இத்தகைய பிரபலமான ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தங்களுடைய நாட்டுக்காகவும் ஐபிஎல் இன் சில சீசனங்களில் விளையாடாமல் இருப்பார்கள் . அந்த வகையில் தற்போது உலகக் கோப்பை டி20 போட்டியை வென்ற இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கிரிஸ் வோக்ஸ் இந்த வருட ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி உள்ளார் .

இது குறித்து பேசி உள்ள அவர் “ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்று . இந்த ஐபிஎல் தொடர்களில் விளையாடுவதன் மூலம் நிறைய அனுபவங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன் அவை என்னுடைய டி20 கேரியரில் முக்கிய பங்கு வைத்து இருக்கின்றன.

கடந்த ஓராண்டுகளாக காயத்திலிருந்து தற்பொழுது தான் மீண்டு வந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறேன் . டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று இங்கிலாந்து அணிக்காக எனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருக்கிறது . மேலும் இந்த வருடத்தில் ஆஷஸ் டெஸ்ட் தொடரும் இருப்பதால் அந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற விரும்புகிறேன்.

ஐபிஎல் போட்டி தொடர்கள் நடைபெறும் அதே நேரத்தில் இங்கிலாந்தில் கவுண்டி சீசனும் தொடங்க இருப்பதால் தன்னால் இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது . கவுண்டி போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக செயல்படுவதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் நிச்சயமாக இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆஷஸ் தொடரானது மிகவும் முக்கியமான ஒன்று அதில் கலந்து கொண்டு இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக என்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அதனால் இந்த வருட ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகிக் கொள்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி இருப்பது கடினமான ஒன்றுதான் இருந்தாலும் ஆசஸ் தொடரில் பங்கேற்பதை தன்னுடைய லட்சியமாக கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார் .

ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக விளையாடியுள்ளார் கிரிஸ் ஒக்ஸ் . இதுவரை 21 போட்டிகளில் ஆடி உள்ள அவர் 30 விக்கெட்களை கைப்பற்றி இருக்கிறார் . இவர் அதிகபட்சமாக 2017 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 13 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை