டி20 உலகக்கோப்பை அணியில் ஜடேஜாவுக்கு இடமில்லை - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

Updated: Sat, Jun 25 2022 17:19 IST
It’s not going to be easy for Ravindra Jadeja to come and take his place in T20 WC: Sanjay Manjreka (Image Source: Google)

டி20 உலக கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில், அதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு மிகச்சவாலானதாக இருக்கும். ஏனெனில் இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைப்பதே சந்தேகம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா ஐபிஎல்லில் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் 15வது சீசனில் 10 போட்டிகளில் ஆடி 116 ரன்கள் மட்டுமே அடித்ததுடன், வெறும் 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஐபிஎல்லில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே சோபிக்காத ஜடேஜா, தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ஆடவில்லை.

இதற்கிடையே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இந்திய அணியின் ஃபினிஷர்களாக தங்களது இடங்களை பிடித்துவிட்ட நிலையில், ஸ்பின்னராக யுஸ்வேந்திர சாஹல் ஆடுவார். மற்றொரு ஸ்பின் ஆல்ரவுண்டருக்கான இடத்தை, அதாவது ஜடேஜாவின் இடத்தை அக்ஸர் படேல் பிடிக்க வாய்ப்புள்ளது என்பதே மஞ்சரேக்கரின் கருத்து.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அக்ஸர் படேல் ஆடினார். ஜடேஜாவை போலவே இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் நன்றாக ஆடிவருகிறார். 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், “தினேஷ் கார்த்திக் 6 அல்லது 7வது பேட்டிங் ஆர்டரில் ஆடுவார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் அபாரமாக ஆடி தாக்கத்தை ஏற்படுத்தினார். ஐபிஎல்லிலும் அபாரமாக ஆடினார். எனவே ஜடேஜாவிற்கு அவரது இடத்தை பிடிப்பது எளிதாக இருக்காது. அக்ஸர் படேலும் அணியில் நன்றாக செட்டில் ஆகிவிட்டார். 

தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா பின்வரிசையில் பேட்டிங் ஆடுவார்கள்.ரிஷப் பண்ட்டும் இருக்கிறார். எனவே ஜடேஜாவின் இடம் சந்தேகம். அதேவேளையில் ஜடேஜா மாதிரியான வீரரை புறக்கணிக்கவும் முடியாது என்பதால், இது தேர்வாளர்களுக்குத்தான் பெரிய தலைவலியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை