நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜேக்கப் ஓரம் நியமனம்!

Updated: Thu, Aug 29 2024 12:36 IST
Image Source: Google

நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09 முதல் 13ஆம் தேதிவரை நொய்டாவில் நடைபெறவுள்ளது.

அதனைத்தொடரில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியானது செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடர்களுக்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் டாம் லேதம் துணைக்கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார். மேற்கொண்டு வில்லியம் ஓ ரூர்க் மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடம் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் ஆல் ரவுண்டர் ஜேக்கப் ஓரமை நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேசமயம் எதிர்வரும் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இவரது பயிற்சி காளமானது தொடரும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெளிப்படுத்தியுள்ளனர். 

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய ஜேக்கப் ஓரம், “நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து மீண்டும் செயல்படும் வாய்ப்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு குழுவுடன் மீண்டும் ஈடுபடுவது எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் என் வாழ்க்கையில் ஒரு பெரிய பகுதியாக இருந்தது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் மரியாதையாக நான் பார்க்கிறேன்.

நியூசிலனது அணியின் பந்துவீச்சு தரவரிசையில் ஒரு புதிய மாற்றம் வந்து கொண்டிருக்கிறது, மேலும் சர்வதேச கிரிக்கெட்டின் சவால்களுக்கு அவர்களை சிறந்த முறையில் தயார்படுத்துவதற்கு எனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். மேலும் வரும் பருவங்களில் அவர்களுடன் இணைந்து எனது வேலையைத் தொடர நான் உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து அணிக்காக கடந்த 2002ஆம் ஆண்டு அறிமுகமான ஜேக்கப் ஓரம், 2012ஆம் ஆண்டுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகினார். இந்த இடைபட்ட காலத்தில் ஜேக்கப் ஓரம், 33 டெஸ்ட், 160 ஒருநாள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 21 அரைதங்கள் என 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும், பந்துவீச்சில் 250க்கு மேற்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை