முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய மெக்குர்க்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த கங்குலி - வைரல் காணொளி!

Updated: Thu, Apr 18 2024 15:38 IST
முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய மெக்குர்க்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த கங்குலி - வைரல் காணொளி! (Image Source: Google)

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய் அகுஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான சஹாவும் 2ரன்களுகு விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த சாய் சுதர்ஷன் 12 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, ரஷித் கான் மட்டும் ஓரளவு தக்குப்பிடித்து 31 ரன்களைச் சேர்த்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது . டெல்லி அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் ஆளுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

இதில் மெக்குர்க் 20, பிரித்வி ஷா 7, அபிஷேக் போரெல் 15, ஷாய் ஹோப் 19 ரன்களைச் சேர்த்து விக்கெட்டுகளை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரிஷப் பந்த் 16 ரன்களையும், சுமித் குமார் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பாக கீப்பிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

இந்நிலையில் இப்போட்டியில் எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் தொடக்கம் கொடுத்தார். இப்போட்டியில் அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸரை விளாசி மிராட்டினார். இதனை பெவிலியனில் இருந்து பார்த்து கொண்டிருந்த அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி ஒருநிமிடம் மெக்குர்க்கின் ஆட்டத்தை பார்த்து வியந்ததுடன், உடனடியாக இருக்கையை விட்டு எழுந்துச் சென்றார். இந்நிலையில் இக்காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை