ஜஸ்ப்ரித் பும்ரா ஓவரில் அதிரடி காட்டிய ஃபிரேசர் மெக்குர்க் - வைரல் காணொளி!

Updated: Sat, Apr 27 2024 17:57 IST
ஜஸ்ப்ரித் பும்ரா ஓவரில் அதிரடி காட்டிய ஃபிரேசர் மெக்குர்க் - வைரல் காணொளி! (Image Source: Google)

டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபிரேசர் மெக்குர்க் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் அபாரமாக விளையாடிய அவர், 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 84 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபக்கம் அவருக்கு துணையாக விளையாடி வந்த அபிஷேக் போரெலும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5 சிக்ஸர்களுடன் 41 ரன்களையும், கேப்டன் ரிஷப் பந்த் 29 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 257 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா, நபி உள்ளிட்டோர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

 

இந்நிலையில் இப்போட்டியின் போது மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சில் டெல்லி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் வெளுத்து வாங்கினார். அதன்படி இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை பும்ரா வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே மெக்குர்க் சிக்ஸர் விளாசி மிரட்டினார். அதன்பின் அடுத்த பந்திலேயும் பவுண்டரி விளாசி அவர், மொத்தமாக அந்த ஓவரில் 18 ரன்களைச் சேர்த்தார். இந்நிலையில் இக்காணொளியானது வைரலாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை