சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஆண்டர்சன்!

Updated: Sat, Aug 27 2022 19:42 IST
Image Source: Google

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டில் விளையாடும் 40 வயது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், சொந்த மண்ணில் 100 டெஸ்டுகளை விளையாடும் முதல் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்தது. அந்த அணி 241 ரன்கள் பின்தங்கியுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தோல்வியிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற நிலைமையை தென்னாப்பிரிக்கா எதிர்கொண்டுள்ளது.

3ஆம் நாளான இன்று, தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கரை போல்ட் செய்தார் ஆண்டர்சன். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்கிற மெக்ராத்தின் சாதனையை சமன் செய்துள்ளார். 

ஆண்டர்சன், மெக்ராத் ஆகிய இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் 949 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்கள். இந்த டெஸ்டிலேயே மெக்ராத்தின் சாதனையை ஆண்டர்சன் தகர்த்து விடும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்கள் (டெஸ்ட், ஒருநாள், டி20)

  • ஆண்டர்சன் - 949 விக்கெட்டுகள்
  • மெக்ராத் - 949 விக்கெட்டுகள்
  • வாசிம் அக்ரம் - 916 விக்கெட்டுகள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை