ஐபிஎல் 2021: அதிவேகமாக பந்துவீசி இளம் இந்திய வீரர் சாதனை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 141 ரன்கள் அடித்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்.சி.பி. அணியால் 137 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் ஆர்.சி.பி. 4 ரன்னில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த உம்ரான் மாலிக் இடம் பிடித்திருந்தார். இவர் அந்த அணியின் வழக்கமான வீரர் இல்லை. சந்தீப் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால் வலைப்பயிற்சி பந்து வீச்சாளரில் இருந்து முதன்மை அணிக்கு மாறினார்.
நேற்று போட்டியின் 2ஆவது ஓவரை வீசினார். முதல் பந்தை 147 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். நான்காவது பந்தை 152.95 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். இந்த பந்து ஐபிஎல் 2021 சீசனில் மிகவும் வேகமாக வீசப்பட்ட பந்தாக கருதப்படுகிறது.
இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் லோக்கி ஃபர்குசன் 152.75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதை உம்ரான் மாலிக் முறியடித்துள்ளார்.
இதையடுத்து 21 வயதேயான உம்ரான் மாலிக் இவ்வாறு சிறப்பாக பந்து வீசியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தாலேகர், அடுத்த ஐ.பி.எல். தொடரில் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
உம்ரான் மாலிக் முறையான பந்து வீச்சாளராக இருக்கிறார். இவருக்குப் பிறகு இன்னும் வீரர்கள் இருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். இர்பான் பதான் டேக் செய்து ஹர்ஷா போக்லே, ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இருக்கிறார்களா? எனப் பதிவிட்டுள்ளார்.