ஐபிஎல் 2022: தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்; சிக்கலில் குஜராத்!

Updated: Tue, Mar 01 2022 11:02 IST
Image Source: Google

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணை இறுதி செய்வது, மைதானம் தேர்வு செய்வது என இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இன்னும் 4 வாரங்கள் கூட இல்லாத சூழலில் இங்கிலாந்தின் முன்னணி வீரரான ஜேசன் ராய் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். மெகா ஏலத்தில் இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு வாங்கியது. மேலும் ஓப்பனிங்கிற்கும் களமிறக்க வைத்திருந்தது. 

ஐபிஎல் தொடர் நடைபெறும் 2 மாதங்களும் முழுமையான பயோ பபுள் பாதுகாப்பில் இருக்க வேண்டும். எனவே மனநிலையை கருத்தில் கொண்டு வெளியேறுவதாக ஜேசன் ராய் விளக்கம் அளித்துள்ளார். இதே பிரச்சினையை கூறி பல்வேறு வீரர்களும் கடந்தாண்டு வெளியேறது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அவரின் விலகலால் குஜராத் அணி மற்றும் அதன் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது அந்த அணியின் ஓப்பனிங்கில் சுப்மன் கில் மட்டுமே தற்போது முதன்மை தேர்வாக உள்ளார். மற்றவர்கள் அனைவருமே மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டரில் களமிறங்கி ஆடக்கூடியவர்கள். இதனால் அந்த அணி ராய்-ன் இடத்தை நிரப்ப வேண்டிய இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

தற்போதைக்கு இளம் வீரர் யாஷ் துல், விருதிமான் சாஹா, மேத்யூவ் வேட் உள்ளிட்டோர் அந்த அணிக்கு ஓப்பனிங் களமிறங்கலாம். ஆனால் யாஷ் துல்-க்கு அனுபவம் கிடையாது. சிறிது காலம் சிரமப்படலாம். இதே போல சஹா தற்போது சரியான ஃபார்மில் இல்ல்லை. எனவே அதிரடி ஆட்டக்காரர் மேத்யூவ் வேட்-ஐ வைத்து தான் ஆட்டத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை