டி20 கிரிக்கெட்டில் பும்ரா அசத்தல் சாதனை!

Updated: Wed, May 18 2022 12:42 IST
Jasprit Bumrah Becomes First Indian Pacer To Reach This Massive T20 Milestone
Image Source: Google

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இதுவரை சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். 

அதன்படி, அஸ்வின் (274 விக்கெட்), சாஹல் (271 விக்கெட்), புயூஷ் சாவ்லா (270 விக்கெட்), அமித் மிஷ்ரா (262 விக்கெட்) ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் டி20-யில் 250-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இந்நிலையில், 250 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற மும்பை - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் , மும்பை வீரர் பும்ரா வாஷிங்டன் சுந்தர் விக்கெட்டை வீழ்த்தினார். 

இதன் மூலம் டி20 போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.  

அவருக்கு அடுத்தபடியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் 223 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் 2ஆவது இடத்தில் உள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை