பும்ரா தலைசிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் அவருக்கு இந்த பிரச்சனை தலைவலிதான் - ரிச்சர்ட் ஹாட்லி

Updated: Wed, May 26 2021 18:31 IST
Image Source: Google

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரீத் பும்ரா. இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ள பும்ராவிற்கு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்ற அடைமொழியும் உள்ளது. 

ஆனால் சமீப காலமாக பும்ராவின் காயம் இந்திய அணிக்கு பெரும் தலை வலியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆஸ்திரேலிய தொடரின் போது காயமடைந்த பும்ரா, அதன்பின் இங்கிலாந்து தொடரிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் பும்ரா குறித்து, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ரிச்சர்ட் ஹாட்லி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரிச்சர்ட் ஹாட்லி, “தற்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்படும் காயத்தை விட, பும்ரா அதிக முறை காயத்தால் அவதிப்படுவார் என நினைக்கிறேன். இதனால், அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி பந்துவீச்சில் கோட்டை விட அதிக வாய்ப்பிருக்கிறது.

அவரது ரன்னிங் அப், அசாத்தியமான கை அசைவு இரண்டும் நிச்சயம் பிரச்சனையை உண்டாக்கும். தற்போது அவர் இளம் வீரர். போகப்போக அவரால் குறுகிய ஓட்டத்தின் மூலம் அதிவேகத்தில் பந்துவீச முடியாது அதே போல் கை அசைவில் பிரச்சினை ஏற்படும். இதனால், அவரின் கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படும். இருப்பினும், அவர் விரைவில் ஓய்வு அறிவிக்க மாட்டார். அவர் ஆற்றல்மிக்க பந்துவீச்சாளர். ஒருவேளை நான் சொன்ன மாதிரி அவருக்கு பிரச்சினை ஏற்படவில்லை என்றால், அவர்தான் தலை சிறந்த பந்துவீச்சாளராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை