மகளிர் டி20 உலகக்கோப்பை: ரோட்ரிஸ், ரிச்சா அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

Updated: Sun, Feb 12 2023 21:52 IST
Image Source: Google

எட்டாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. வருகிற 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறகியது. 

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஜவேரியா கான் 8 ரன்களும் ,முனீபா அலி 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதாதர் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் இழந்தாலும் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது. பிஸ்மா மரூஃப் 68 ரன்களும், ஆயிஷா நசீம் 43 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதனை தொடர்ந்து 150 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு யஸ்திகா பாட்டியா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் யஸ்திகா பாட்டியா 17 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷஃபாலி வர்மா 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டத்தொடங்கினர். இதற்கிடையில் ஜெமிமா ரோட்ரிஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினார்.

இதன்மூலம் இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 பந்துகளில் 53 ரன்களையும், ரிச்சா கோஷ் 20 பந்துகளில் 31 ரன்களையும் சேர்த்தனர். மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகியாகவும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::