டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் மட்டுமே குறிக்கோள் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சர். இவர் இந்திய அணியுடனான தொடரின் போது காயமடைந்தார். அதன்பின் காயத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார்.
இந்நிலையில் இவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், அவர் கட்டாயம் 3 மாத ஓய்வில் இருக்க வேண்டியது அவசியமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் ஆர்ச்சர் விலகுவார் என்று தெரிகிறது. அதேசமயம் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெறவுள்ளதால், ஆர்ச்சர் அதற்கு தயாராகும் விதத்தில் மற்ற தொடர்களில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள ஆர்ச்சர்,“எனது காயம் எனக்கு பெரிய தடையாக இல்லை. ஏனெனில் எனது முக்கியமான குறிக்கோள் இந்தாண்டி டி20 உலகக்கோப்பை தொடர் மற்றும் ஆஷஸ் தொடரில் விளையாடுவது மட்டுமே.
அதேசமயம் நான் இத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த கோடை காலத்தில் எந்த கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆர்ச்சரின் இந்த கருத்தால், ஒருவேளை ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பரில் தொடங்கினாலும் இவர் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது.