சிஎஸ்ஏ டி20 : நட்சத்திர வீரர்களை வாங்கிக்குவித்த ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்!

Updated: Tue, Sep 20 2022 20:21 IST
Image Source: Google

ஐபிஎல் பாணியில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்குகிறது. இதில் பங்குபெறும் அணிகளை ஐபிஎல் அணிகளே வாங்கியதால் இதன் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி மிரட்டலான அணியை உருவாக்கியது. ஜோகனஸ்பர்க் அணியின் கேப்டனாக ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடிய டுபிளஸிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏலத்திற்கு முன்பே சூப்பர் கிங்ஸ் அணி, மொயின் அலி, மகிஷ் தீக்சனா, ரோமேரியோ செஃபர்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோயிட்சே ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. 

எனினும் மொயின் அலி இந்த தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் அதிரடி இளம் வீரராக கருதப்படும் டோனோவன் ஃபெராரியாவை சூப்பர் கிங்ஸ் அணி தட்டி தூக்கியது. 19 டி20 போட்டியில் விளையாடி 384 ரன்களை ஃபெராரியா குவித்துள்ளார். அவருடைய சராசரி 54 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 148 ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் 2 கோடியே 47 லட்சம் ரூபாயை கொடுத்து அவரை ஏலத்தில் சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது.

இதே போன்று இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி புருக்கை 94 லட்சம் ரூபாயை கொடுத்து சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது. இதே போன்று தென் ஆப்பிரிக்க வீரர் ஜேன்னிமான் மாலனை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கும், அதிரடி வீரர் ரீசா ஹெண்டரிக்சையும்  2 கோடியே 53 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப்பையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது. 

ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்: ஃபாஃப் டு பிளெசிஸ், மகீஷ் தீக்சணா, ரோமரியோ ஷிப்பர்ட், ஜெரால்ட் கோயிட்சே, ஹாரி புருக், ஜென்னிமான் மாலன், ரீசா ஹெண்டரிக்ஸ், கையில் வெர்ரையின், ஜார்ஜ் கார்டன், அல்சாரி ஜோசப், லியூஸ் டுபிளாய், லீவிஸ் கிர்காரி, லிசாட் வில்லியம்ஸ், நாண்ட்ரே பர்கர், டோனோவன் ஃபெராரியா, மலூசி சிபாடோ, கேலப் செலிகா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை