இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.  

Advertisement

இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன.  அந்தவகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 09ஆம் தேதி முதல் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் தொடர் தொடக்கவுள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் ஏலமும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 

Advertisement

அதன்படி நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், வெஸ்ட் இண்டீஸின் பிராண்டன் கிங் ஆகியோருடன் இன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கையும் எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடருக்காக அணிகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். 

கடந்த இரண்டு சீசன்களாக பார்ல் ராயல்ஸ் அணியின் மிகமுக்கிய வீரராக இருந்து வந்த ஜோஸ் பட்லர் தற்போது எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் இதற்கான காரணத்தையும் காணொளி வாயிலாக தெரிவித்துள்ளார். ஜோஸ் பட்லர் தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை கூறும் காணொளியை பார்ல் ராயல்ஸ் அணி தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

அக்காணொளியில் பேசிய ஜோஸ் பட்லர், “இது பார்ல் ராயல்ஸ் ரசிகர்களுக்கான செய்தி. எதிர்வரும் எஸ்ஏ20 தொடரில் பங்கேற்க முடியாததை நினைத்து ஏமாற்றமடைகிறேன். ஏனெனில் இத்தொடர் நடைபெறும் இங்கிலாந்து அணி சில சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. அதனால் எனது முழு கவனமும் இங்கிலாந்து அணி மீது இருக்க வேண்டியது அவசியம். என்னால் மீண்டும் இத்தொடரில் விளையாட முடியாது எனக்கு பெரும் அவமானமாக உள்ளது.

இத்தொடரின் மீது எனக்கும் பெரும் மதிப்பு உள்ளது. அதிலும் பார்ல் ராயல்ஸ் அணி மீதும், எங்கள் ரசிகர்கள் மீதும் மிகுந்த அன்பை கொண்டுள்ளேன். அதன் காரணமாகவே நான் ஏமாற்றமடைகிறேன். எதிர்வரும் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணி சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் நான் மீண்டும் இத்தொடரில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜோஸ் பட்லர் தொடரில் பங்கேற்காதது பார்ல் ராயல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News