டி20 உலகக்கோப்பை: இந்த இரு அணிகள் தான் கடும் சவாலாக இருக்கும் - ஜோஸ் பட்லர்!
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வென்றதில்லை என்ற விமர்சனத்தை உடைத்தெறிய இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற தீவிரத்தில் விராட் கோலி உள்ளார்.
ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவருகிறது. அதிலும் 2019ஆம் ஆண்டு முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, டி20 உலக கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், தங்கள் அணிக்கு கடும் சவாலாக எந்த அணி திகழும் என்று கூறியுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
டி20 உலக கோப்பை குறித்து பேசியுள்ள ஜோஸ் பட்லர், “நாங்கள் வலுவான அணியாக திகழ்கிறோம். ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகிய 2 சூப்பர் ஸ்டார்களை கண்டிப்பாக மிஸ் செய்வோம். ஆனால் மேலும் சில மேட்ச் வின்னர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 அணிகளும் வலுவான அணிகளாக திகழ்கின்றன. இந்த 2 அணிகளும் கண்டிப்பாக எங்களுக்கு கடும் சவாலளிக்கும் அணிகளாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.