கிரிக்கெட்டில் இந்த விதிமுறையையும் கொண்டு வர வேண்டும் - அஸ்வின்!

Updated: Wed, Jul 05 2023 14:26 IST
“Just Like Concussion Substitutes, There Should Be Substitutes For Muscular Injury” – Ravichandran A (Image Source: Google)

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் நேத்தன் லயன் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும்பொழுது காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். நடக்கவே முடியாத சூழலிலும் கடைசியில் வந்து பேட்டிங் இறங்கினார்.

இது இங்கிலாந்து அணிக்கு அட்வான்டேஜ் கிடைத்தது போல ஆகிவிட்டது. ஏனெனில் பந்து வீச்சிலும் நேத்தன் லயன் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. பேட்டிங்கில் பங்களிப்பை கொடுக்கக்கூடியவர். ஆனால் செய்ய முடியவில்லை. இந்த ஒரு சூழலை கையாள்வதற்கு இரு அணிகளும் சமநிலையில் பலம் பெற்று விளையாடுவதற்கு புதுவிதமான விதிமுறைகளை கொண்டுவர வேண்டும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “போட்டியின்போது தலையில் அடிபட்டு விட்டால் அதற்காக மாற்று வீரரை உள்ளே கொண்டு வந்து விளையாட வைக்கலாம் என்கிற விதி இருப்பது போல, கடுமையான தசை பிடிப்பு மற்றும் நரம்பு பிடிப்பு அல்லது வேறு ஏதும் பலமான காயங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கும் மாற்று வீரர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு விதிமுறைகளை கொண்டுவர வேண்டும்.

போட்டியின் முதல் நாளில் காயம் ஏற்பட்டு விட்டால் மீதம் இருக்கும் நான்கு நாட்களும் ஒரு வீரர் இல்லாமல் விளையாட வேண்டும். ஒரு அணிக்கு அதிக பலமும் மற்றொரு அணிக்கு கூடுதல் சிக்கலும் இருக்கும் நிலை ஏற்படும். ஆகையால் சமநிலை பெறுவதற்கு இது போன்ற காயங்கள் ஏற்படும் பொழுதும் மாற்றுவீரரை கொண்டு வரலாம்.

வீரர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துவிட்டால், காயம் எவ்வளவு தீவிரமாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். அதைப்பொறுத்து மாற்று வீரரை அனுமதிக்கலாமா? இல்லையா? என்பதை உறுதி செய்யலாம். பல வசதிகள் இருக்கின்றது. அதற்கு ஏற்றார்போல இரு அணிகளும் பலத்துடன் விளையாடும் படி உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை