மும்பை அணியில் ரஷித் கான்; சென்னை அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Thu, Aug 11 2022 16:56 IST
Kagiso Rabada, Dewald Brevis, Rashid Khan, Sam Curran, Liam Livingstone signed up by MI Cape Town (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள புதிய டி20 லீக் தொடரில் பங்குபெறும் 6 அணிகளையும் , இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் அணிகளே வாங்கியது. இதில் சென்னை அணி ஜோகனஸ்பர்க் அணியையும், மும்பை அணி கேப் டவுன் அணியையும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பார்ல் அணியை ராஜஸ்தானும் வாங்கியுள்ளன.

தற்போது வரை 30 வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக இங்கிலாந்தை சேர்ந்த 11 வீரர்களும், இலங்கையை சேர்ந்த 10 வீரர்களும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் விளையாட தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில், இந்திய ரூபாய் மதிப்பில் மூன்றரை கோடி ரூபாய் ஊதியத்திற்கு பட்லர் மற்றும் லிவிங்ஸ்டோன் தங்களது பெயரை கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 17 வீரர்கள் விளையாடலாம். இதில் 3 வெளிநாட்டு வீரர்கள், ஒரு தென் ஆப்பிரிக்க வீரர் மற்றும் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாத ஒரு தென் ஆப்பிரிக்க வீரர் என 5 பேரை ஏலத்துக்கு முன்பே ஒப்பந்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வெளிநாட்டு விரர்களும் வேவ்வெறு நாட்டை சேர்ந்த வீரர்களாக இருக்க வேண்டும்.

அதன் படி, மும்பை அணி ரஷித் கான், லிவிங்ஸ்டோன், ககிசோ ரபாடா, சாம் கரண் என 4 வீரர்களை முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டு பிளஸிஸ் மற்றும் மொயின் அலியை ஒப்பந்தம் செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் ஆண்டிரிச் நோர்ட்ஜேவவையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதே போன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐடன் மார்க்கரமையும், லக்னோ அணி குயின்டன் டி காக்கையும் ஓப்பந்தம் செய்ய உள்ளது. 6 அணிகளும் மற்ற வீரர்களை தேர்வு செய்வதற்கான எலம் அடுத்த சில வாரங்களில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடருக்கு பிறகு அதிக ஊதியம் கிடைக்கும் தொடராக தென் ஆப்பிரிக்க டி20 தொடர் விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை