இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் இடம் பெற்றுள்ளனர் - கேன் வில்லியம்சன்!

Updated: Thu, Nov 17 2022 13:13 IST
Kane Williamson aware of 'superstars' in Indian team: 'Natural not everyone can do everything'
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியோடு வெளியேறிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தற்போது அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் இந்த டி20 தொடர் குறித்து பேட்டி அளித்துள்ள நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் குறித்து கூறுகையில், “இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் இடம் பெற்றுள்ளனர். சீனியர் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறவில்லை என்றாலும் அவர்களை அணியில் இருக்கும் இளம் வீரர்கள் அனைவருமே உண்மையான சூப்பர் ஸ்டார்கள் தான்.

இந்த இளம் இந்திய அணியால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். எனவே இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் எங்களுக்கு ஒரு கடினமான தொடராக அமையும் என்று நினைக்கிறேன். எங்கள் அணியில் ட்ரென்ட் போல்ட் ஒரு உலகத்தில் வாழ்ந்த வீரர். அவர் எங்கள் அணியில் ஒரு பெரிய அங்கமாக திகழ்ந்துள்ளார்.

இந்த தொடரில் அவர் விளையாட முடியவில்லை. ஆனால் நிச்சயம் அவர் நியூசிலாந்து அணிக்கு விரைவில் திரும்புவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் மார்டின் குப்தில் மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை