இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் வில்லியம்சன்!

Updated: Wed, Nov 27 2024 12:06 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் அறிமுக வீரர் ஜேக்கப் பெட்தெலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மூன்றாம் வரிசையில் களமிறங்குவார் என்பதும் உறுதியாகியுள்ளது. மேலும் குழந்தை பிறப்பின் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள ஜேமி ஸ்மித்திற்கு மாற்றாக ஒல்லி போப் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து மீண்டுள்ளதுடன், தற்போது பிளேயிங் லெவனிலும் இடம்பிடித்தார். இதனால் இந்திய டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற வில் யங் நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் தனது இடத்தை இழந்துள்ளார்.

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சில சாதானைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். அதன்படி அவர் இந்தப் போட்டியில் 119 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களை நிறைவு செய்வார்.  இதன்மூலம் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல் கல்லை எட்டிய முதல் வீரர் எனும் சாதனையை வில்லியம்சன் படைக்கவுள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 180 இன்னிங்ஸ்களில் 54.48 சராசரியில் 8,881 ரன்கள் எடுத்துள்ளார். இது தவிர, இப்போட்டியில் அவர் 73 ரன்கள் எடுத்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2,500 ரன்களை நிறைவு செய்வார். இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 25 டெஸ்டில் விளையாடி 44 இன்னிங்ஸ்களில் 60.67 சராசரியில் 2,427 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் இப்போட்டியில் கேன் வில்லியம்சன் சதமடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலந்து முன்னாள் வீரர அலெச்டர் குக்கின் சாதனையை சமன்செய்து 11ஆம் இடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்த்க்கது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன் 102 போட்டிகளில் விளையாடி 32 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம் (கே), டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, டிம் சௌதீ, வில் ஓ ரூர்க்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை