ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நேற்று அகமதாபாத்தில் கோலாகல்மாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. பரபரப்பாக சென்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது. ருத்துராஜ் 92 ரன்கள் விளாசினார்.

Advertisement

இதையடுத்து 179 ரன்களை சேஸ் செய்த குஜராத் அணி 19.2 ஓவர்களில் சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த சீசனில் இரண்டு போட்டிகள் மற்றும் இந்த போட்டி என சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வரும் கேன் வில்லியம்சன் கடந்த ஐபிஎல் ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார். அப்போதே அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் இவர்தான் என்று உறுதியானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் பிளேயிங் லெவனிலும் விளையாட வைக்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் அபாரமாக விளையாடி வந்தார். போட்டியின் 13ஆவது ஓவரில் இவர் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சன் தாவிப்பிடிக்க முயற்சித்தார். அப்போது பந்தை பிடித்து உள்ளே தூக்கி போட்டவுடன் பவுண்டரிக்கு வெளியே குதித்த கேன் வில்லியம்சனுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.

எழுந்து நிற்க கூட முடியாமல் தவித்து வந்தார். இவரை கவனிக்க உள்ளே வந்த பிசியோ மருத்துவர்கள் அவரை தோள்பட்டையில் தூக்கியபடி வெளியே அழைத்துச் சென்றனர். உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்திருக்கிறது.

வில்லியம்சன் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலக உள்ளார் என்கிற தகவல்களும் வெளிவருகின்றன. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை என்றாலும், குஜராத் டைட்டன்ஸ் தரப்பிலிருந்து சொல்லப்படும் தகவல்களின்படி வில்லியம்சன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவது உறுதி என்று தெரிகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News