போட்டியின் போது கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்!

Updated: Sun, Jul 04 2021 21:56 IST
Karthik apologises for 'neighbour's wife' comment (Image Source: Google)

இலங்கைக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்டத்தில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்தார். 
 
இந்தியாவுக்காக 26 டெஸ்டுகள், 94 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் தொலைக்காட்சிக்காக வர்ணனையாளராகப் பணியாற்றி பாராட்டுகளைப் பெற்றார். தற்போது இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரிலும் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் ஆட்டத்தின் வர்ணனையின்போது பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட் பற்றி வர்ணனையாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். 

அப்போது பேசிய தினேஷ் கார்த்திக்  “பேட்கள் மீதான அதிருப்தி பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் இருக்கும். பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்குத் தங்களுடைய பேட்களைப் பிடிக்காது. அவர்களுக்கு அடுத்த பேட்ஸ்மேன்களின் பேட்களைப் பிடிக்கும். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல. அவர்கள் எப்போதும் நன்றாக இருப்பது போல இருக்கும்” என வேடிக்கையாக கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து, தினேஷ் கார்த்திக்கின் இக்கருத்திற்கு சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன. 

இந்நிலையில் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “போட்டியின் போது தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். அது நான் கூற நினைத்த கருத்து அல்ல. நான் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது நிச்சயமாக சரியான உதாரணம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை