ஓய்வு குறித்த ரவி சாஸ்திரியின் கருத்துக்கு தினேஷ் கார்த்திக் பதிலடி!

Updated: Sun, Nov 20 2022 12:20 IST
Karthik's unique response to Shastri's criticism of Dravid for taking break from NZ tour (Image Source: Google)

டி20 உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது.இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் அபாரமாக செயல்பட்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், அடுத்து அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு இளம் இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ளது.

இதில் டி20 தொடர் நவம்பர் 18, 20, 22 ஆகிய தேதிகளிலும், ஒருநாள் தொடர் நவம்பர் 25, 27, 30 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். டி20 போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு துவங்கும். ஒருநாள் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கும்.

டி20 உலகக் கோப்பை முடிந்து ஐந்து நாட்களில் நியூசிலாந்து தொடர் இருந்ததால் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் ஓய்வு வழங்கப்பட்டு, விவிஎஸ் லட்சுமணனுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிராவிட்டிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருப்பது குறித்துப் பேசிய முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “தான் ஓய்வெடுத்து கொள்வதில் நம்பிக்கை இல்லாதவன். எனது அணியை அனைத்து முறையும் அருகில் இருந்து பார்க்க விரும்புபவன் நான்” எனக் கூறியிருந்தார்.

இந்த கருத்திற்கு தற்போது இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார். அதில், “நியூசிலாந்து தொடர் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. அந்த தினத்தில் மற்றொரு இந்திய அணி வங்கதேசத்திற்கு சென்று பயிற்சியை தொடங்க உள்ளது. ஒரு நபர் ஒரே நேரத்தில் எப்படி நியூசிலாந்திலும், இங்கிலாந்திலும் இருக்க முடியும். அதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 2023 உலகக் கோப்பை முடிந்த உடன், பயிற்சியாளர்களுக்கான ஒப்பந்தம் முடிவடைகிறது.

அப்போது டெஸ்டிற்கு ஒரு பயிற்சியாளரையும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ஒரு பயிற்சியாளரையும் நியமிப்பது குறித்து பிசிசிஐ யோசிக்க வேண்டும். நான் முன்புபோல் அல்லாமல், தற்போது நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறோம். இதனால், ஒரே நேரத்தில் இரண்டு தொடர்கள் நடக்கும் நிலை இருக்கிறது. இதனை கருத்தில்கொண்டு இனி இரண்டு பயிற்சியாளர்களை பிசிசிஐ நியமிக்க வேண்டும்.

வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட், அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட்களில் இந்தியா வெற்றிபெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட முடியும். இதனால், தற்போது சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள். டி20 உலகக் கோப்பை நடைபெற இன்னும் 2 வருடங்கள் இருப்பதால், அந்த பார்மெட் பற்றி அவர்கள் யோசிக்க கூட மாட்டார்கள்’’ எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை