SL vs PAK, 2nd Test: பாகிஸ்தான் பந்துவீச்சில் திணறும் இலங்கை!

Updated: Tue, Jul 26 2022 19:26 IST
Image Source: Google

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசிம் ஷா, யாசிர் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த இமான் உல் ஹக் - கேப்டன் பாபர் ஆசாம் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். ஆனாலும் 32 ரன்களில் இமான் உல் ஹக்கும், 16 ரன்களில் பாபர் ஆசாமும் விக்கெட்டை இழந்தனர். 

இதையடுத்து களமிறங்கிய முகமது ரிஸ்வான், ஃபவத் ஆலாம் ஆகியோர் தலா 24 ரன்கள் சேர்த்த நிலையில் ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஹா சலாம் அரைசதம் கடந்தார். பின் அவரும் 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் யாசிர் ஷா 13 ரன்களுடன் களத்தில் உள்ளார். இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதையடுத்து 3ஆவது நாளான இன்று பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது. இதில் ரமேஷ் மெண்டிஸ் மற்றும் ஜெயசூர்யாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 231 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் 2ஆவது இன்னிங்சை இலங்கை அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களா டிக்வெலா - பெர்ணாண்டோ களமிறங்கினர். 15 ரன்னிலும் பெர்ணான்டோ 19 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 15, மேத்யூஸ் 35, தினேஷ் சண்டிமால் 21 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

போதுமான வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் 3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை