பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லாகூர் கலந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஃபர்ஹான் - ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வேண்டர் டுசென் 15 ரன்களுக்கும், அப்துல்லா ஷஃபிக் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த ஃபர்ஹான் - ஜஹந்தத் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் அரைசதம் கடந்திருந்த ஃபர்ஹான் 6 பவுண்டரி, 3 சிகர்கள் என 62 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த சிக்கந்தர் ரஸா 18 ரன்களுக்கும், பிராத்வைட் 6 ரன்களுக்கும், ஷாஹீன் அஃப்ரிடி 12 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜஹந்தத் கான் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 45 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடில் லாகூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குயிட்ட கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சௌத் சகீல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடி வந்த சௌத் சகீல் 40 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஜேசன் ராய் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கவாஜா நஃபே ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 18, சர்ஃப்ராஸ் அஹ்மத் 11, ரூதர் ஃபோர்ட் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த கவாஜா நஃபே அரைசதம் கடந்துடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 60 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News