டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கீரன் பொல்லார்ட்

Updated: Tue, Jun 24 2025 13:07 IST
Image Source: Google

Kieron Pollard 700 T20 Matches: சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணிக்காக கீரன் பொல்லார்ட் விளையாடியதன் டி20 கிரிக்கெட்டில் தனது 700ஆவது போட்டியில் பங்கேற்றுள்ளார். 

எம்ஐ நியூயார்க் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகளுக்கு இடையேயான எம்எல்சி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணியில் மேத்யூ ஷார்ட் மற்றும் டிம் செஃபெர்ட் 91 ரன்களையும், ஜேக் ஃபிரேசர் மெக்குர் 64 ரன்களையும் சேர்த்ததன் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 246 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் தரப்பில் கீரன் பொல்லர்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணியில் மொனாங்க் படேல் 60 ரன்களையும், குயின்டன் டி காக் 70 ரன்னிலும் விக்கெட்டி இழக்க, இறுதிவரை போராடிய கீரன் பொல்லார்ட் 34 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியாதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் யூனிகார்ன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இது கீரன் பொல்லார்ட்டின் 700ஆவது டி20 போட்டியாகும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 700 டி20 போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் வீரர் எனும் சாதனையை கீரன் போல்லார்ட் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் டுவைன் பிராவோ 582 போட்டிகளில் விளையாடி இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர்களுக்கு இடையில் 118 போட்டிகள் வித்தியாசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் 

  • 700* – கீரோன் பொல்லார்ட்
  • 582 – டுவைன் பிராவோ.
  • 557 – ஷோயப் மாலிக்.
  • 556 – ஆண்ட்ரே ரஸ்ஸல்.
  • 551 – சுனில் நரைன்.
  • 530 – டேவிட் மில்லர்.
  • 500 – அலெக்ஸ் ஹேல்ஸ்.
  • 486 – ரவி போபரா.

Also Read: LIVE Cricket Score

கீரன் பொல்லார்டின் டி20 கிரிக்கெட் வாழக்கைப் பற்றி பேசினால், இதுவரை 700 போட்டிகளில் 622 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு சதம் மற்றும் 61 அரைசதங்களுடன் 13668 ரன்களை அடித்துள்ளார். இதில் 916 சிக்ஸர்களும் அடங்கும். பந்துவீச்சை பொறுத்த மட்டில் 328 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் மற்றும் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை