பிஎஸ்எல் தொடரின் போது ஏற்பட்ட அனுபவம் குறித்து மனம் திறந்த குசால் மெண்டிஸ்!

Updated: Sat, May 17 2025 21:08 IST
Image Source: Google

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் இன்று நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இந்நிலையில் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதற்கு முன்பு பிசிசிஐ ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இப்போது வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும், ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடர் முடியும் வரை தற்காலிக மாற்று வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும் கூறிவுள்ளது. 

அந்தவகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ள காரணத்தால் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பெட்டர் குசால் மெண்டிஸை ரூ.75 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகினார். 

இந்நிலையில் குசால் மெண்டிஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது தனக்கு நடந்த பயங்கரமான சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். அதன்படி நடப்பு பிஎஸ்எல் தொடரில் விளையாடும்போது, ​​இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமை மிகவும் பதட்டமானபோது அவர் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார்.போர் போன்ற சூழ்நிலையில், மெண்டிஸ் விரைவாக பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் அவரால் தனது கிட் பேகை கூட கொண்டுவர முடியவில்லை. ஐபிஎல் 2025 பிளே ஆஃப்களுக்கு முன்பு எப்படியாவது தனது கிட் பேகை அவர் மீண்டும் பெற விரும்பினார், ஆனால் எல்லா முயற்சிகளையும் மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் பாகிஸ்தான் வாழ் இலங்கை நாட்டவரான வெய்ன் தனது உதவியதாகவும், அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் எக்ஸ் பதிவில் மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது பதிவில், “துரதிர்ஷ்டவசமாக நான் திடீரென பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை விட்டு வெளியேற வேண்டியிருந்தபோது, ​​எனது கிட்பேக்கை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. ஐபிஎல்-ல் சேர எல்லாவற்றையும் முயற்சித்தேன், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. பாகிஸ்தானில் வசிக்கும் இந்த அற்புதமான இலங்கையர் திரு. வெய்ன், எனது கிட்பேக்கை கொழும்பு வரை வந்து என்னிடம் ஒப்படைத்துள்ளார்” என்று பதிவுசெய்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்துள்ள குசால் மெண்டிஸ் பிளே ஆஃப் சுற்றுக்காக தயாராகி வருகின்றனர். தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றி தோல்விகள் என 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. மேற்கொண்டு நாளை நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை