ஐபிஎல் 2025: கேகேஆர்- லக்னோ போட்டி வேறு இடத்திற்கு மாற்றம்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியான பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு எதிரான போட்டியானது வேறு மைதானத்திற்கு மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக கொல்கத்தா காவல்துறை அனுமதியை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் கொண்டாடத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்து பணியில் காவல்துறை ஈடுபட இருப்பதன் காரணமாக, ஐபிஎல் போட்டிக்கான பாதுக்காப்பை வழங்க இயலாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினருடன் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் சினேகாஷிஷ் கங்குலி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த தகவலை அவர் உறுதிசெய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஐபிஎல் போட்டிக்கு போதுமான பாதுகாப்பை வழங்க காவல் துறையால் முடியாது என்று அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். காவல்துறை பாதுகாப்பு இல்லையென்றால், 65,000 ரசிகர்கள் கூட்டத்தைக் கையாள்வது சாத்தியமில்லை. நாங்கள் பிசிசிஐ-க்கு தகவல் தெரிவித்துள்ளோம், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் இறுதி முடிவை எடுப்பதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக கடந்த ஆண்டு ராம நவமி காரணமாக ஐபிஎல் போட்டியின் அட்டவணை மாற்றப்பட்டது. அதன்படி கடந்த ஐபிஎல் சீசன்னில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருந்த போட்டியானது ராம நவமி அன்று நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த போட்டி இடமாற்றம் செய்யப்பட்டது. அதோபோல் இந்த போட்டியும் இடமாற்றம் செய்யப்படும் என்பதும் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.