ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மேலும் அன்றைய தினமே நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ச் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேகேஆர் அணியின் ஜெர்சியில், அந்த அணி இதுவரை ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றதைக் குறிக்கும் வகையில் இலச்சினைக்கு மேல் மூன்று நட்சத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ராமன்தீப் சிங், மணீஷ் பாண்டே, வைபவ் அரோரா, அனுகுல் ராய், மயங்க் மார்கண்டே மற்றும் லுவ்னித் சிசோடியா ஆகியோர் புதிய ஜெர்சியை அணித்திருக்கும் காணொளியையும் கேகேஆர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகிவில்லை.
முன்னதாக கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் கேகேஆர் அணியின் கேப்டனாக செயல்பட்ட நிலையில், இந்தாண்டு வீரர்கள் ஏலத்திற்கு முன் அவரை அணியில் கேகேஆர் நிர்வாகம் நீக்கியது. இருப்பினும் தற்போதுள்ள அணியில் அஜிங்கியா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் மற்றும் சுனில் நரைன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இவர்களில் யாரேனும் ஒருவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதில் அஜிங்கியா ரஹானே ஐபிஎல், உள்ளூர் தொடர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்திய அணியை வழிநடத்திய அனுபவத்தையும் கொண்டுள்ளார். அதேசமயம் வெங்கடேஷ் ஐயரை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ள காரணத்தால் அவர் மீதும் கேகேஆர் பார்வை உள்ளது. இதுதவிர்த்து ரிங்கு சிங், சுனில் நரைன் உள்ளிட்டோரும் உள்ளூர் போட்டிகளில் அணியை வழிநடத்திய அனுபவத்தை கொண்டுள்ளனர் என்பதால் அவர்களுக்கும் வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: Funding To Save Test Cricket
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நார்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பிர்மன் பாண்டே பவல், ஸ்பிர்மன் பான்டே பவல் , அஜிங்க்யா ரஹானே, அனுகுல் ராய், மொயின் அலி, உம்ரான் மாலிக்.