ஐபிஎல் 2021: கேகேஆர் vs ஆர்ஆர் - உத்தேச அணி!

Updated: Thu, Oct 07 2021 13:03 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஷார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் ஈயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சீசனில் 12 புள்ளியுடன் இருக்கும் கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. மிகப்பெரிய வெற்றியை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. அந்த அணியின் நிலை பஞ்சாப்பை போன்றே உள்ளது.

நாளையுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. நாளைய ஆட்டங்களில் மும்பை- ஐதராபாத், டெல்லி- பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

சென்னை, டெல்லி, பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே- ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து 4ஆவதாக எந்த அணி தகுதி பெறும் என்று நாளைய போட்டிகளின் முடிவிலேயே தெரியும். 4 அணிகள் இதற்கான வாய்ப்பில் இருந்தாலும் கொல்கத்தா, மும்பை இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

உத்தேச அணி 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஈயான் மோர்கன் (கே), ஷாகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ராஜஸ்தான் ராயல்ஸ் - எவின் லூயிஸ்/ லியாம் லிவிங்ஸ்டன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் (கே), சிவம் துபே, கிளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர்/ கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேத்தியா, குல்தீப் யாதவ், சேத்தன் சகரியா, ஸ்ரேயாஸ் கோபால், முஸ்தாபிசூர் ரஹ்மான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை