ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!

Updated: Sun, Apr 14 2024 13:48 IST
Image Source: Google

 

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 28ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏனெனில் நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5  போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன. இந்த இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கேகேஆர் அணி நடப்பு சீசனில் விளையாடிய 4 போட்டிகளில் ஒரு தோல்வி, மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் தொடர்கிறது. அணியின் பேட்டிங்கில் சுனில் நரைன், பில் சால்ட், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸல் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள நிதீஷ் ரானாவும் இடம்பிடித்துள்ளது கூடுதல் பலம்.

அதேசமயம் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேசமயம் அணியின் பந்துவீச்சில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி போன்று தரமான சுழற்பந்து வீச்சாளர்களுடன் மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஆண்ட்ரே ரஸல் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் அந்த அணியின் வெற்றியைத் தடுப்பது கடினம் தான்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: பில் சால்ட், சுனில் நரைன், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், அனுகுல் ராய், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்த சீசனில் விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க வில்லை. குறிப்பாக ஆயூஷ் பதோனியைத் தவிர்த்து மற்ற பேட்டர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை என்பதால் அந்த அணி தோல்வியைத் தழுவியது.

இதனால் இன்றைய போட்டியில் பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்ப்பட்டுள்ளனர். பந்துவீச்சில் மயங்க் யாதவ் காயத்திலிருந்து மீளாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் நவீன் உல் ஹக், மொஹ்சின் கான் போன்ற வீரர்கள் இருப்பது அணிக்கு நம்பிக்கை வழங்கி வருகிறது. ஆனால் ரவி பிஷ்னோய், குர்னால் பாண்டியா ஆகியோர் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக், கேஎல் ராகுல் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, குர்னால் பாண்டியா, அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், யாஷ் தாக்கூர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை