கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்

Updated: Sat, Mar 22 2025 09:46 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து, ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மழை பெய்யும் என்ற அபாயத்திற்கு மத்தியில் இப்போயானது நடைபெறுமா என்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து. ஏனெனில் நேற்றைய தினம் மழையின் காரணமாக கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணி வீரர்கள் தங்களின் பயிற்சிகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

மேற்கொண்டு இன்றைய தினமும் ஈடன் கார்டன் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்யும் என்ற சூழல் இருப்பதன் காரணமாக ஆர்ஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டி நடக்குமா நடக்காதா என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணியின் உத்தேச லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புதிய கேப்டனான அஜிங்கிய ரஹானே தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் இந்த சீசனை எதிர்கொள்ளவுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் குயின்டன் டி கா, வெங்கடேஷ் ஐயர். ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், மணீஷ் பாண்டே, ரோவ்மன் பாவெல், மொயீன் அலி, ரமந்தீப் சிங் உள்ளிட்டோர் இருப்பது அணிக்கு பலத்தைக் கூட்டுகிறது. 

இருப்பினும் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், ஹர்ஷித் ரானா ஆகியோரையே அந்த அணி அதிகம் சார்ந்துள்ளது. மேற்கொண்டு ஆன்ரிச் நோர்ட்ஜே, ஸ்பென்சர் ஜான்சன், சேத்தன் சகாரியா, வைபவ் அரோரா போன்ற வீரர்கள் இருக்கும் நிலையிலும், அவர்களால் இந்த ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு வெற்றியைத் தேடித்தர முடியுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உத்தேச லெவன்: சுனில் நரைன், குயின்டன் டி காக், அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஆன்ட்ரிச் நோர்ட்ஜே, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மறுபக்கம் ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணி இம்முறை ராஜத் படிதாரின் தலைமையில் களம் காண்கிறது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் விராட் கோலி, பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் சர்மா, ஜேக்கப் பெத்தெல், டிம் டேவிட், தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா என நட்சத்திர பட்டாளங்கள் வரிசைக்கட்டின் நிற்கின்றனர்.

ஆனால் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், லுங்கி இங்கிடி, நுவான் துஷாரா, ரசித் தார், ரொமாரியோ செஃபெர்ட் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில் சுழற்பந்து வீச்சில் அந்த அணி மயங்க் மார்கண்டே மற்றும் குர்னால் பாண்டியாவை மட்டுமே அதிகம் சார்ந்துள்ளது. இதில் லிவிங்ஸ்டோன், படிக்கல் ஆகியோராலும் பந்துவீச முடியும் என்றாலும் அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது கேள்விகுறி தான். 

உத்தேச லெவன்: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்ட்யா, ரசிக் சலாம், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்.

Also Read: Funding To Save Test Cricket

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி (துணை கேப்டன்), ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ராஜத் படிதர்
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல், லியாம் லிவிங்ஸ்டன்
  • பந்து வீச்சாளர்கள் - வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை