வெங்கடேஷ் ஐயர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் - கேஎல் ராகுல்!

Updated: Tue, Jan 18 2022 19:45 IST
KL Rahul Hints At 'Exciting' Venkatesh Iyer To Play South Africa ODIs (Image Source: Google)

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நாளை தொடங்குகிறது இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.முதல் முறையாக ஒருநாள் அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக களமிறங்குகிறார்.இதில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் சாதாரண வீரர்களாக விராட் கோலி களமிறங்குகிறார். 

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எல். ராகுல், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடைந்த டெஸ்ட் தோல்வி மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.இதனால் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடுவோம். விராட் கோலி கேப்டனாக இந்திய அணிக்கு என்று ஒரு தரத்தையும் நிலையையும் நிர்ணயித்துள்ளார். அந்த வகையில் நாங்களும் செயல்படுவோம்

நான் தோனி மற்றும் கோலி இருவரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளேன். அவர்கள் இருவரிடமும் நிறைய விசயங்களை கற்று கொண்டுள்ளேன். அந்த பாடம் கேப்டனாக இருக்கும் போது நிச்சயம் கைக்கொடுக்கும். வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை கேப்டனாக விராட் கோலி எங்களிடம் விதைத்துள்ளார். அந்த நம்பிக்கையுடன் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறோம்.

விராட் கோலி ஒரு வீரரிடம் இருந்து சிறந்த திறனை வெளி கொண்டு வருவார். அதனை கேப்டனாக நானும் செய்ய முயற்சிப்பேன். நானும் மனிதன் தான் தவறு செய்வேன். ஆனால் அந்த தவறிலிருந்து விரைவாக பாடம் கற்பேன். நாளைய போட்டியில் நான் தான் தொடக்க வீரராக களமிறங்க உள்ளேன்.ஒரு ஆல்ரவுண்டரை சேர்த்து 6 பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க திட்டுமிட்டுள்ளோம்.

வெங்கடேஷ் ஐயர் ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதனால் அவருக்கு வாய்ப்பு வழங்க நினைக்கிறோம். உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதனை மனதில் வைத்து அணியை உருவாக்க உள்ளோம். டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக தேர்ந்து எடுக்கப்பட்டால் பெருமையாக கருதுவேன், ஆனால் எனது குறிக்கோள் எல்லாம் தற்போது தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடர் மேல் தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை