தென் ஆப்பிரிக்காவில் இதுதான் எங்களுக்கு சவால் - கேஎல் ராகுல்!

Updated: Fri, Dec 24 2021 19:57 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னணி இளம் தொடக்க வீரராக கே.எல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப காலகட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டு வாக்கில் தனது மோசமான பார்ம் காரணமாக டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்த அவர் மீண்டும் அண்மையில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக இடம் பிடித்தார். 

அந்த தொடரில் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

அதுமட்டுமின்றி ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் துணை கேப்டன் பதவியும் ராகுல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் எதிர்வரும் தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து பேசிய ராகுல், “இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்காக நாங்கள் முழுவேகத்தில் தயாராகி வருகிறோம். எங்கள் அணியுடன் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப் பெரிய பலத்தை தந்துள்ளது. 

ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அளவு அனுபவம் உடையவர். அதுமட்டுமின்றி தென் ஆப்பிரிக்கா மண்ணில் அதிக கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அவருடைய அனுபவங்களையும், ஆலோசனைகளையும் எங்களுடன் தற்போது அவர் பகிர்ந்து கொள்கிறார்.

அதுமட்டுமின்றி இந்த பயிற்சி செஷன்களிலும் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். மாயங்க் அகர்வால் இந்திய ஏ அணியில் டிராவிட்டுடன் அதிகளவு விளையாடியுள்ளதால் அவர்களுக்கிடையேயான புரிதல் நிறைய இருக்கிறது. தற்போது தொடக்க வீரர்களான எங்கள் இருவருக்குமே ராகுல் டிராவிட் சிறப்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

தென் ஆப்பிரிக்க மண்ணில் பவுன்ஸ் மற்றும் வேகம் சற்று அதிகம் இருக்கும் என்பதனால் இன்னிங்சின் ஆரம்பத்தில் 30 முதல் 35 ஓவர் வரை சமாளித்து ஆடுவது மிகவும் முக்கியம். இதுவே இங்கு நாங்கள் எதிர்கொள்ளும் சவால் அதன்பிறகு சமாளிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை