IND vs SA: இதன் காரணமாகவே நிதானமாக விளையாடினேன் - கேஎல் ராகுல் ஓபன் டாக்!
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கேரளாவில் நடைபெற்றது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலையும் பெற்றதி.
இந்தநிலையில், தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல், இந்த போட்டியில் தான் பொறுமையாக விளையாடியதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தது. ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு பெரிதாக ஒத்துழைககவிட்டாலும், சூர்யகுமார் யாதவ் அசால்டாக சிக்ஸர்கள் விளாசினார். இதே போன்ற கடினமான ஆடுகளங்களை நான் இதற்கு முன்பு எதிர்கொண்டுள்ளேன், ஆனால் அதில் பெரிதாக ரன் எடுத்தது இல்லை.
எனவே இந்த போட்டியில் என்னால் முடிந்தவரை களத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன். சூர்யகுகுமார் யாதவும் அதிரடியாக விளையாட விரும்பினார், இதை அவர் என்னிடமும் கூறியதால் அவரை அதிரடியாக விளையாடவிட்டு நான் மறுமுனையில் பொறுமையாக விளையாடினேன்.
பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சரியாக செய்தால் பேட்ஸ்மேன்களுக்கான வேலை இலகுவாகிவிடும். அர்ஸ்தீப் சிங் ஒவ்வொரு போட்டியிலும் தன்னை முன்னேற்றி கொண்டே வருகிறார். அர்ஷ்தீப் சிங் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது இந்திய அணிக்கு கிடைத்த கூடுதல் பலமே” என்று தெரிவித்தார்.