தென் ஆப்பிரிக்க மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஹென்ரிச் கிளாசென் நீக்கம்!

Updated: Mon, Apr 07 2025 22:49 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீப காலங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எழுச்சி பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த அணி சமீபத்தில் பங்கேற்ற அனைத்து ஐசிசி தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டதுடன் அரையிறுதிச்சுற்றுகளுக்கு முன்னேறியுள்ளது. 

இருப்பினும் இதுவரை ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத நிலை தொடர்கிறது. இருப்பினும் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளதால், அதில் சாம்பியன் பட்டத்தை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றவகையில் அந்த அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை இன்று வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ஹென்ரிச் கிளாசென் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. ஆனால் ஹென்ரிச் கிளாசெனின் ஒப்பந்தம் குறித்த விவாதங்கள் இன்னும் நடந்து வருவதாகவும், சரியான நேரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் 18 பேர் இந்த மத்திய ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளனர். இதில் அணியின் கேப்டன் டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென், லுங்கி இங்கிடி மற்றும் காகிசோ ரபாடா உள்ளிட்டோர் தொடர்கின்றனர். இதுதவிர்த்து இளம் வீரர்கள் குவேனா மபாகா, லிசாத் வில்லியம்ஸ், சேனுரன் முத்துசாமி உள்ளிட்டோருக்கு முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணியின் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் நட்சத்திர வீரர்கள் டேவிட் மில்லர் மற்றும் ரஸ்ஸி வேண்டர் டுசென் ஆகியோர் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஹைபிரிட் ஒப்பந்தத்தை பெற்றுள்ளனர். இதன்மூலம், வீரர்கள் குறிப்பிட்ட இருதரப்பு தொடர்கள் மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதுடன், மற்ற டி20 லீக் தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தென் ஆப்பிரிக்க மத்திய ஒப்பந்தம் 2025-26

Also Read: Funding To Save Test Cricket

டெம்பா பாவுமா, டேவிட் பெடிங்ஹாம், நந்த்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, லுங்கி இங்கிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன் மற்றும் லிசாட் வில்லியம்ஸ். ஹைபிரிட் ஒப்பந்தம் - டேவிட் மில்லர், ரஸ்ஸீ வேன்டர் டுசென்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை